பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அவரது அம்மா நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் உங்கள் அனைவரது வாழ்த்துக்களும், அக்கறைக்கும் நன்றி. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.