நடிகை சமந்தா பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வருகிற ஜூன் 4-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது .
சமீபத்தில் இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரின் பிரமோஷன் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சமந்தாவிடம் பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசை என கேட்டுள்ளனர். இதற்கு ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.