Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை ரகசிய திருமணம்?….. இவரா….! வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகை மீரா மிதுன் இயக்குனருடன் கோவிலில் மாலை மாற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மாடல் அழகிய நடிகை மீரா மிதுன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பிறகு அந்த சீன் எடிட்டிங்கில் தூக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் கலையரசன் மனைவியாக நடித்திருப்பார். பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற இவர் இயக்குனர் சேரன் மீது தேவையில்லாமல் பழி போட்டு அந்த வாரமே வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டதால் அவரை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் பேய காணோம் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். பேய் மற்றொரு பெயர் காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் அன்பரசன் உடன் மீரா மிதுன் கோவிலில் மாலை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கோவிலில் நின்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |