Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… அவரே வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்து…!!!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி வந்தார். சமீபத்தில் ஷ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கடவுள் இன்று பிற்பகல் ஒரு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்தார். இதற்கு முன்பு இப்படி ஒரு மகிழ்ச்சியான உணர்வை அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது ஆசீர்வாதங்களுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |