பிரபல நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நாம் நம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பேபி பவுடரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த பேபி பவுடரில் ஆபத்துக்கள் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. மேலும் சில பெண்களும் இந்த பேபி பவுடரை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் பிரபல ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 890 கோடி அபராதமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான பேபி பவுடர் மற்றும் ஷவர் டு ஷவர் பவுடரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், அதில் உள்ள ஆஸ்பெட்டாஸ் நச்சுப்பொருள் காரணமாக தனக்கு மெசோதிலியோமா என்ற புற்று நோய் ஏற்பட்டதாகவும் டோன்னா ஓல்சன் என்ற பெண் தொடர்ந்திருந்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆஸ்பெட்டாஸ் ரசாயனம் இருப்பதாக 2018ல் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.