பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் (51) கொச்சியில் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். “ஸ்வந்தம் சுஜாதா” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், மலையாளம், தமிழில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories