மேகாலயா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து, பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மரப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அதன்படி கேரோ என்ற மலைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், இரு ஊர்களையும் இணைக்கின்ற அந்த மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.