Categories
தேசிய செய்திகள்

பிரபல மினரல் வாட்டர் நிறுவனத்தை வாங்க டாடா திட்டம்… முடிவுக்கு வருமா டீல்…? வெயிட்டிங் மோடில் அம்பானி…!!!!!

மினரல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வரும் பிரபல பிஸ்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதனால் டீல் முடிவுக்கு வருமா என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும் டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் FMCG நுகர் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. ஏற்கனவே tata consumer நிறுவனம் ஹிமாலயன் டாடா, காப்பர் பிளஸ், டாடா குளுக்கோ போன்ற பிராண்டுகளின் கீழ் மினரல் வாட்டர் விற்பனை செய்து வருகின்றது. மற்றொரு புறம் மினரல் வாட்டர் தொழில்துறையில் பிஸ்லரி முன்னிலையில் இருக்கின்றது. பிஸ்லரி டாடாவை கைப்பற்றி விட்டால் மினரல் வாட்டர் மார்க்கெட்டில்  டாட்டாவின் அதிகரிக்கும் உயர்ந்துவிடும்.

அதனால் இந்தியாவில் மினரல் வாட்டர் துறையின் மார்க்கெட் சுமார் 19000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்படுகிறது. இந்த துறை வருடத்திற்கு சராசரியாக 13 சதவீதம் வளர்ச்சி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்திய மினரல் வாட்டர் மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது கொக்ககோலாவின் கின்லே, பெப்சியின் அகுவாஃபினா, பார்லேவின் டெய்லி, ஐ ஆர் சி டி நிறுவனத்தின் ரயில் நீர் போன்ற பிராண்டுகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனமும் FMCG துறையில் களம் இறங்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதனால் ரிலையன்ஸ் விரைவில் தனது மினரல் வாட்டர் பிராண்ட் குறித்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |