பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார்.
தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வந்தார். இதையடுத்து ரமேஷ்பாபு ( வயது 56 ) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
https://twitter.com/Poojaforever5/status/1480123190475112451?t=5s37tUpR19mo04WbpELYSw&s=08
இந்த நிலையில் நேற்று ரமேஷ்பாபு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ்பாபுவின் அண்ணனும் பிரபல தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு காலமான செய்தி திரையுலகினரையும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.