Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை”…. கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா…? போலீசார் விசாரணை….!!!!!

கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். இதுபோலவே அவர் நண்பர் பெருமாள் என்ற இளைஞரும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவ குழுவினர் சோதனை செய்தார்கள். இதில் பிரைட் ஆல்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் எனக் கூறினார்கள். ஆல்வின் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் அங்கு காயங்களுடன் இருந்த பெருமாள் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். கஞ்சா விற்பனை செய்வதில் பிரைட் ஆல்வினுக்கு மணி என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. ஆகையால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |