Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி வெட்டி கொலை…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம்பேட்டை பிடாரியம்மன் கோவில் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்பு என்கிற கண்ணன்(26). ரவுடியான கண்ணன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று மாலை நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்களான ரேவந்த், மூர்த்தி ஆகிய இரண்டு பேரையும் மர்ம நபர்கள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2020-ஆம் ஆண்டு கட்டிட தொழிலாளியான காமராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் கண்ணனுக்கு தொடர்பு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கண்ணன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து 2 நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சிக்கு ஊருக்கு வந்த கண்ணனை மர்ம நபர்கள் கொலை செய்தனர். எனவே பழிக்கு பழியாக கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |