Categories
தேசிய செய்திகள்

பிரபல லால்பாக் பூங்கா…. டிஜிட்டல் கேமராவுக்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பிரபல பூங்காவில் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் லால்பாக் பூங்கா இருக்கிறது. இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு குறிப்பாக காதலர்கள் அதிக அளவில் வருகின்றனர். இங்குள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றது. இதனையடுத்து தேனீக்களும் அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி இருக்கிறது. இந்நிலையில் பூங்காவுக்கு வருபவர்கள் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி பறவைகள் மற்றும் தேனீக்களை போட்டோ எடுக்கின்றனர். இந்த கேமராவில் இருந்து வெளிப்படும் ஒளியினால் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த பூங்காவில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு தேனீக்கள் கொட்டி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் கேமராவிலிருந்து வெளிவந்த ஒளியினால் தேனீக்கள் சிறுமியை கொட்டியதாக தெரிவித்தனர். இதன் காரணமாக டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தக்கூடாது என தோட்டக்கலைத்துறை அறிவித்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி சிலர் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கேமராக்களை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |