நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருப்பார்கள்.
இந்த படப்பிடிப்பின் போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண தேதி விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.