பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல விஜே நுழைய உள்ளதாக தகவல்கள் பரவுகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4- வது சீசன் 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளனர். இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற போகும் போட்டியாளர் யார்?என்பது நாளை தெரியவரும். சமீபத்தில் சின்னத்திரை நடிகர் அசீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் வருவது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் பிரபல விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டில் புதிய வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போவதாக தகவல் பரவுகிறது. இதுகுறித்து மகேஸ்வரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘இன்னும் ஒருசில தினங்களில் ஆச்சரியமான அறிவிப்பு வெளிவரும்’ என்று பதிவிட்டு ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்டு இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அசீம் வருவாரா? அல்லது விஜே மகேஸ்வரி வருவாரா? என பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.