Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவை வைத்து பிரிந்தாமாஸ்டர் இயக்கும் இரண்டாவது படம்….. யார் தெரியுமா….?

பிருந்தா மாஸ்டர் இயங்கும் இரண்டாவது படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் பிருந்தா மாஸ்டர். நீண்ட காலமாக சினிமாவில் பணிபுரிந்து வரும் இவர் ஹே சினமிகா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து  பிருந்தா மாஸ்டர் இரண்டாவது  படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். ஹே சினமிகா  படத்தை தயாரித்த ஜியோ ஸ்டியோஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படம் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |