நடிகர் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனான பிரபாஸின் அடுத்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அளவில் வித்தியாசமான களங்கள், பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வெற்றிபெற்ற தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கே.ஜி.எஃப் படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘சலார்’ என்ற டைட்டிலுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.