நடிகர் பிரபாஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸின் 25-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Kickstarting my journey with #SPIRIT. Directed by @imvangasandeep and produced by #BhushanKumar @TSeries & @VangaPictures – #Prabhas #Prabhas25SandeepReddyVanga#Prabhas25 pic.twitter.com/qa9PezNG62
— Prabhas FC (@PrabhasRaju) October 7, 2021
அதன்படி ‘ஸ்பிரிட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி பிரபலமடைந்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்க இருக்கிறார். மேலும் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 8 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பூஷன் குமார் தயாரிக்க இருக்கிறார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.