Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படத்தில் இணையும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகி இருந்தது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சயீப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Prabhas Wants To Watch Maanikya | Mirchi Hero Prabhas Congratulates Sudeep | Kannad Movie Maanikya - Filmibeat

இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடைபெற்ற நிலையில் கொரோனா இரண்டாம் அலை  காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |