பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கண்டனம் எழுந்துள்ளது.
நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்படத்திற்கு எதிராக படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என பல குரல்கள் எழுந்துள்ளது. அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ் ஆதி புருஷ் திரைப்படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்து இருக்கின்றார்கள். ஆகையால் படம் வெளியிட தடை செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பொங்கல் பண்டிகையொட்டி இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் எழுந்திருப்பது படக் குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.