Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபாஸின் பிரம்மாண்டமான ராதே ஷ்யாம்”… வசூலில் படுதோல்வி…!!!

பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் நடிப்பில் தற்போது ராதேஷ்யாம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார் மற்றும் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெற முடியவில்லை என செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இது 138 கோடி ரூபாய் சேர் கலெக்ஷனை செய்ய வேண்டுமாம். ஆனால் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் வெறும் 75 கோடியே வசூல் செய்துள்ளது. இது 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |