Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே… சம்பளம் எவ்வளவு தெரியுமா?…!!!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியானது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Some Prabhas fans unhappy with Deepika Padukone in Nag Ashwin film; 2  reasons why - IBTimes India

இதுதவிர மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |