பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
Who is Vikramaditya? 🤔
Stay tuned to find out in the #RadheShyam teaser, out on 23rd October! ☺️💕 Enjoy the teaser in English with subtitles in multiple languages! #GlobalPrabhasDay#Prabhas @hegdepooja @UV_Creations @GopiKrishnaMvs @TSeries @director_radhaa pic.twitter.com/KrX1GeNu7a— Prabhas FC (@PrabhasRaju) October 20, 2021
மேலும் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிரபாஸின் பிறந்தநாளன்று (அக்டோபர் 23-ஆம் தேதி) காலை 11:16 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸ் நடித்துள்ள விக்ரமாதித்யா கேரக்டரை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த டீசர் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.