நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதே ஷ்யாம் படத்தை வருகிற ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.