Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட  மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

John Abraham in Prabhas Salaar? - tollywood

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |