Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரபுதேவாவின் “ரேக்ளா”… படத்தை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்…!!!

நடிகர் பிரபுதேவாவின் 58வது திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் கிளாப் செய்து தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபுதேவா தற்போது ரேக்ளா திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது பிரபுதேவாவின் 58வது திரைப்படமாகும். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அன்பு இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் பூஜை நடைபெற்றது. அப்போது திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் கிளாப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

Categories

Tech |