நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
#Bagheera – First Single #PsychoRaja announcement video out now !!
Check it out 🔛https://t.co/iuQ44ydKuq@Adhikravi @PDdancing @gvprakash @RVBharathan@AmyraDastur93 @selvakumarskdop @AbinandhanR@AntonyLRuben @Ganesan_sekar_ pic.twitter.com/nxWUOBDbEt
— Think Music (@thinkmusicindia) April 24, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடியுள்ள சைக்கோ ராஜா பாடல் வருகிற மே 6ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.