நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரி, சுரேஷ் மேனன், மகேந்திரன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பொன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபுதேவா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.