பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் நடிப்பில் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் பொய்க்கால் குதிரை படத்தை இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் .
https://twitter.com/PDdancing/status/1422882312346243084
மேலும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பிரபு தேவா கையில் ஒரு குழந்தையுடன் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.