நடிகர் சூர்யா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து நடிகர் சூர்யா தற்போது வணங்கான் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் RC திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கெஸ்ட் ரோல் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.