கல்யாண வீட்டில் வைக்கும் ருசிமிகுந்த வெண்டைக்காய் பச்சடி நம் வீட்டிலேயே செய்யலாம்.. அம்ம்புட்டு ருசி ட்ரை பண்ணுங்க.!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100
பச்சைமிளகாய் – 3
தக்காளி – 3
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்டைக்காய் – 15
வத்தல் பொடி – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
காயப் பொடி – அரை டீஸ்பூன்
தண்ணீர் – ஒரு டம்ளர்
தேங்காய் – அரை கப்
பூண்டு – 4 பல்
சீரகம் – அரை ஸ்பூன்
துவரம் பருப்பு – 100 கிராம்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தாளிக்க தேவையானவை:
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானது, உரித்து வைத்திருக்கும் சிறிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதோடு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். சீக்கிரம் வதங்குவதற்கு அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெண்டைக்காயை வட்டமாக நறுக்கி வைத்திருக்க வேண்டும். அதையும் அதோடு சேர்த்து வதக்கவும்.
சேர்த்து வதக்கும்பொழுது அதன் பிசுபிசுப்பு தன்மை போகும் வரை வதக்கவும்.பிறகு சாம்பார் பொடி, வத்தல் பொடி ஒரு ஸ்பூன், மஞ்சள் பொடி அரை ஸ்பூன் சேர்த்து அதையும் கிளறி விடுங்கள். பிறகு தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் துருவிய தேங்காய், பூண்டு, சீரகம் அரைத்து வைத்திருக்க வேண்டும். அந்த கலவையை அதில் சேர்த்து கிளறி விட வேண்டும். பருப்பை நன்கு மாவாக வேகவைத்திருக்க வேண்டும்.அதையும் ஒரு கப் அளவிற்கு இதோடு சேர்த்து கிளறி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதித்து வரும்பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பொரியவிடவும். பொரிந்ததும் சீரகம் சேர்க்கவும். பிறகு சிறிது வெந்தயம் சேர்க்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். மிளகாய் வத்தல் 4 போட்டுக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்றாக பொரிந்து வரும் அளவிற்கு தாளித்து கொள்ளுங்கள்.
பிறகு நன்றாக கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன், தாளித்து வைத்திருப்பதை ஊற்றி கிளறி விடுங்கள். கெட்டியானதும் இறக்கி பரிமாறுங்கள். கல்யாண வீட்டு பச்சடி இப்படித்தான் செய்யறாங்க பிரமாதமான சுவை..!