பிக்பாஸ்- 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ்- 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா, பிரபல மாடல் கோபிநாத், பவானி ரெட்டி, நமிதா மாரிமுத்து, நடிகை சகிலா மகள் மிலா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் கமல் பேசும் அட்டகாசமான புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.