பாகலுரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள பாகலூரில் கடந்த 2-ஆம் தேதி முதல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பலவிதமான நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்துள்ளன. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பூவினால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது விழாவை பார்க்க வந்த பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் திருவிழாவை கான பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து மக்கள் திரண்டனர்.
மேலும் கர்நாடக எல்லையிலுள்ள மாலூர், மாஸ்தி, சம்பங்கிரி ஆகிய இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு குடிநீர், பானகம், நீர் மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. அங்கு தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம் போன்ற நிகழ்ச்சிகள் வருகின்ற 7 ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஏற்பாடுகளை பாகலுரின் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்