இந்தியாவில் பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை நடைபெறாத விதமாக பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்தி நகரில் இன்று தொடங்குகின்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற இருக்கின்ற பன்னிரண்டாவது பாதுகாப்பு துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தியா ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திக்க இருக்கின்றார்.
இந்தியா ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதற்கான உத்தியை கையாளுதல் என்பது இந்த கூட்டத்தின் கருப்பொருளாகும். இதனை எடுத்து இந்த கண்காட்சியில் இராணுவம் கடற்படை விமானப்படை கடலோர காவல் படை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை போன்றவற்றின் நேரடி பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சிகள் மாலை நடைபெறுகிறது. பாதுகாப்பு உற்பத்தி துறையில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கான கருவிகள் இடம்பெறுகிறது பல நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றது. மேலும் பாதுகாப்பு கண்காட்சி 2022 இந்தியாவின் பெருமைக்கான பாதையை எதிரொலிக்க இருக்கின்றது. பாதுகாப்பு கண்காட்சியை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாற்ற இது நேரடியாகவும் காணொலி மூலமாகவும் நடத்தப்படுகின்றது. இந்த கண்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிறுவனங்கள் காணொலி காட்சி வாயில் மூலமாக பங்கேற்றுக் கொள்ளலாம்.