பிரபல இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் முக்கிய ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் சில பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், சங்கர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் பணிகளும் முடிவடைந்த பிறகு சங்கர் தன்னுடைய கனவு படத்தை இயக்க இருக்கிறார்.
அதாவது நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் இயக்குனர் சங்கரின் நீண்ட நாள் கனவு. இவரின் கனவு படம் 1000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் ஆகியோர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சங்கர் நீருக்கடியில் எடுக்கும் படத்தை அடுத்த வருடத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.