ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ருத்ரன் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார்.
In theaters from 14th April 2022 🎥#RudhranfromApr14 pic.twitter.com/E9UeRNXyjl
— Raghava Lawrence (@offl_Lawrence) August 26, 2021
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. மேலும் அதே நாளில் தான் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கே.ஜி.எப்- 2 படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது