Categories
உலக செய்திகள்

பிரம்மாண்ட மலர் திருவிழா….. பார்வையாளர்களை பிரமிக்க வைத்த…. 60-வது அலங்கார அணிவகுப்பு….!!

மெடலின் நகரில் நடைபெற்ற 60-வது மலர் அலங்கார அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா நாட்டில் மெடலின் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் பிரசித்தி பெற்ற ‘சிலிடெரா’ என்னும் வகை மலர்கள் அலங்கார அணிவகுப்பு பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. மலர்கள் விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற இந்த நகரில் ஆண்டுதோறும் இந்த திருவிழா பாரம்பரிய முறையில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி இந்த ஆண்டு மெடலின் நகரில் நடைபெற்ற 60-வது மலர் அலங்கார அணிவகுப்பு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த அழகிய பல வண்ண மலர்களை 100 கிலோ எடை கொண்ட மலர் சக்கரத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

Categories

Tech |