உக்ரைன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் புதிய பிரம்மாண்ட ராணுவ விமானத்தை நாட்டிற்கு அர்பணித்துள்ளது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 10-தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட ராணுவ விமானத்தை தயாரித்து வந்தது. இந்தவகை விமானத்தில் கூடுதல் ராணுவ வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் மற்றும் பிற மாகாண அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும், உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.