Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரம்மாஸ்திரா” காலணிகளுடன் கோவில் மணியை அடிக்கும் ரன்வீர் கபூர்…. ரசிகர்கள் கடும் கண்டனம்…!!

பிரபல நடிகர் கோவிலுக்கு காலணிகளுடன் சென்றதால் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் மற்றும் அவரின் காதல் மனைவி ஆலியா பட் நடித்திருக்கும் படம் பிரம்மாஸ்திரா. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த ட்ரைலரை ரசிகர்கள் பலர் பாராட்டி வந்தாலும், ரன்வீர் கபூர் காலணிகளுடன் கோவில் மணியை அடிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதால் அதற்கு பல ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது என கூறியுள்ளனர்.

இதற்கு படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்திய கலாச்சாரத்திற்கு மரியாதை கொடுக்கும் படம்தான் பிரம்மாஸ்திரம் என்றார். இதனையடுத்து நானும் என் குடும்பத்தினரும் இந்து கடவுள்களை  பூஜித்து வழிபட்டு வருகிறோம். அப்படி இருக்கும்போது நான் எப்படி ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதமாக படம் எடுப்பேன்  என்றார். மேலும் ரன்வீர்  கபூர் கோவிலுக்குள் காலணிகளுடன்  நுழையவில்லை என்றும், துர்கா பூஜை நடக்கும் பந்தலில் தான் காலணிகளுடன் நிற்கிறார் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |