Categories
பல்சுவை

பிரம்மிக்க வைக்கும் ரகசியங்கள்…. பூட்டான் குறித்த சுவாரசியமான தகவல்கள் இதோ…!!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் பூட்டான். அங்கு இருக்கும் பல்வேறு விஷயங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. உலகத்தில் இருக்கும் நாடுகளிலேயே கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் பூட்டானும் அடங்கும். இங்கு வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் 70% பூட்டான் காடுகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் பூட்டானில் குற்றங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அந்நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

இதனையடுத்து பூட்டான் நாட்டில் எந்த ஒரு டிராபிக் விளக்குகளையும் நாம் பார்க்க முடியாது. அடுத்ததாக அந்த நாட்டு மக்கள் அனைவரும் பாரம்பரிய உடையை அணிகின்றனர். இது அந்நாட்டில் சட்டமாகவே உள்ளது. பூட்டானில் மன்னர் ஆட்சி நடைபெற்றாலும் அங்கு மக்கள் நினைத்தது தான் நடக்கும். நாட்டு மக்களின் நலனுக்காக அவர்களின் கோரிக்கையை அரசர் நிறைவேற்றுகிறார். இதனையடுத்து பூட்டானில் இருக்கும் பாரோ ஏர்போர்ட் உலகத்திலேயே அபாயகரமான ஏர்போர்ட்டாக இருக்கிறது. ஆனாலும் சிறப்பாக பயிற்சி பெற்ற 8 விமானிகளுக்கு மட்டும் அந்த ஏர்போர்ட்டில் தரை இறங்க அனுமதி கொடுத்துள்ளனர்.

Categories

Tech |