பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் youtube சேனல்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் வசித்து வரும் ரோஹித் குமார் என்ற இளைஞர் மத்திய குற்ற பிரிவில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 youtube சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிராங்க் வீடியோக்களை எடுக்கும் youtube சேனல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலகட்டங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வீடியோவிற்கு தகுந்தாற்போல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.