பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் விட்டுள்ளார்.
தற்போது அழிந்து போன சிறுத்தை புலிகளை மீட்டெடுக்கும் வகையில் நமீபியாவில் இருந்து 8 சிறுத்தை புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை புலிகளை நேற்று மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெயராம் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி நான் கேப்டவுனுக்கு சென்றேன். அப்போது சிறுத்தை புலி திட்டம் போடப்பட்டது என கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள கடித்ததில் இந்த சிறுத்தை புலிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மன்மோகன் சிங் அரசு. அப்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி ஜெயராம் ரமேஷ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தை புலிகள் மையத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 2009- ஆம் ஆண்டு காங்கிரஸ் பிராஜெக்ட் சீட்டாவை அறிமுகப்படுத்தியது. மேலும் நமது பிரதமர் பொய் சொல்லுகிறார். பாரத் ஜோடா யாத்ரா மீதான எனது ஈடுபாட்டில் காரணமாக நேற்று இந்த கடிதத்தை பகிர முடியவில்லை என கூறியுள்ளார் .