Categories
உலக செய்திகள்

“பிராந்திய ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் உள்ளது”….. ரணில் விக்ரமசிங்கே கருத்து…!!!!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்களின்   தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டிருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய  ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே  பொருளாதார நெருக்கடியில் சரி செய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு இடையே இலங்கை அரசிற்கு இந்தியா சார்பில்  இதுவரை 5 மில்லியன் டாலர் அளவிலான அவசர கால உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே  பிராந்திய ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் இருக்கிறது எனவும் இலங்கை அரசு தனக்கு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார். மேலும் தென்மேற்கு ஆசிய நாடுகளிடையே பிராந்திய அளவில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் நிறைய அரசியல் இருப்பதாக கூறியவர் எந்த நாடுகளின் பெயரை குறிப்பிடாமல் இலங்கை அரசால் பிராந்தி அளவில் பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |