Categories
உலக செய்திகள்

பிரான்சில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை… ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு… இதுதான் காரணமா…?

ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரெஞ்சு  துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |