பிரான்ஸில் PCR சோதனைகளில் கண்டறிய முடியாத புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகளில் மருத்துவர்களால் எளிதில் கண்டறிய முடியும்.ஆனால் தற்போது பிரான்சில் பரவிக் கொண்டிருக்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து,வயதான 8 நோயாளிகள் இதுவரை கண்டறிய முடியாத விசித்திரமான தொற்றுக்கு பிரான்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 7 பேருக்கு சோதனை செய்து பார்த்ததில் அது என்ன நோய் தொற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஆன்டிபாடி சோதனைகளில் மட்டும் அவர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .மேலும் கிரேட்டர் பாரிஸில் அதிகமானோர் மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 மில்லியன் தொகை கொண்ட இந்தப் பகுதியில் 1,00,000 பேர்களில் 400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரானா பாதிப்பால் 100 அவசர சிகிச்சை நோயாளிகள் பாரிசிலிருந்து மற்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பிரான்ஸ் பிரதமர் ஜென் கேஸ்டெக்ஸ் மூன்றாவது அலை குறித்த சந்தேகத்தை கூறியுள்ளார் .