Categories
உலகசெய்திகள்

பிரான்சில் கடையில் காரை மோதி கொள்ளை… போலீஸ் துரத்தியதால் நதிக்குள் குதித்த மர்ம நபர்…. பெரும் பரபரப்பு…!!!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கண்ணாடியில் மோதி கடையில் இருந்த விலை உயர்ந்த  சுமார் 30 கைப்பைகளை மர்ம  நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதன்பின் அவர் காரில் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் துரத்தி உள்ளார்கள். அதனை பார்த்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சினி நதியில் குதித்து இருக்கின்றார். ஆனால் உடனடியாக போலீசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்து கரையேற்றி கைது செய்து இருக்கின்றார்கள். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்டு அத்தனை பொருட்களும் போலீசார் மீட்டு  இருக்கின்றனர். மீட்கப்பட்ட பைகள் ஒவ்வொன்றும் 1000 யூரோ  முதல் 3000 யூரோக்கள் வரை விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |