கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரான்சில் 4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,229 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்தமாக 4,015,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவியதிலிருந்து பிரான்ஸில் மொத்தமாக 90,146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 லிருந்து 24,749 குறைந்துள்ளதாகவும், லைப் சப்போர்ட் தேவைப்படுவோர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 4033 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் ஆலிவர் வரன், தற்போது பிரான்சில் புதிய பதிப்பில் 67% பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக இருப்பதாகவும் அதேபோன்று பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் காணப்படும் புதிய விகாரங்கள் பிரான்சின் மொத்த பதிப்பில் 6 % வரை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பாரிஸ் போலீஸ் மாகாணம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மாஸ்க் அணிவது மற்றும் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.மேலும் பொது இடங்களில் 4000 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பிற்காக நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது .பிரான்ஸ் 45,69,849 கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிற்பகுதியிலிருந்து வழங்கியுள்ளது.
நேற்று ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வீட்டிலிருந்தே 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.