Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு … நிரம்பிய தீவிர சிகிச்சை பிரிவு … நோயாளிகள் மற்ற நாடுகளுக்கு வெளியேற்றம் …!!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா  நோயாளிகள், மற்ற நாடுகளுக்கு சிகிச்சைக்காக    அனுப்பப்படுகின்றன  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய நாட்டில் உருமாறிய கொரோனா  வைரஸ் ,வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோன்று பிரான்ஸ் நாட்டிலும் உருமாறிய கொரோனா  வைரஸின் தாக்கமானது அதிகரித்து காணப்படுவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகின்றது.

இனி வரும் வாரங்களில் தோற்றாது அதிகமாக காணப்படும் என்பதால் நோயாளிகள் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ,சிகிச்சை அளிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று காலை நேரத்தில் குறைவான நோயாளிகள் வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இனி வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்து காணப்படும் என்பதால் ,அவர்கள் மற்ற நாட்டிற்கு சிகிச்சைக்காக வெளியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டது .

Categories

Tech |