பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பற்றி மக்கள் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்து தகராறில் பெண் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான எந்தவித தகவல்களையும் தேசிய காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல் நடத்திய நபர்கள் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் அது யார் என்பதும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் தான் என்பதும் காவல்துறையினர் உறுதியாக தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சம்பவத்தை ஆராய்ந்து வருவதாக மட்டுமே காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உறுதிப்படுத்த தகவல்களை பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ கணக்குகளை பின்தொடரவும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தத் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.