Categories
உலக செய்திகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 2 இளைஞர்கள்..போலீசாரால் கைது .!!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது .

பிரான்சின் இரண்டு வெவ்வேறு நகரங்களின்  அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கைது  செய்யப்பட்டவரில் முதல் நபர் மன்டேஸ்- ல -ஜோலி  என்ற இடத்தில் வசித்து வருகிறார் .இரண்டாம் நபர் அவிஓன் என்ற நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் 2 பேரும் சிரியாவில் உள்ள தீவிரவாத தாக்குதலில் உள்ளவர்கள் என்றும் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |