பிரான்சில் தீவிர வேகம் எடுத்திருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கும் கொரோனா பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பிரான்சும் இருக்கின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,429 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,924 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். மேலும் வயதானவர்களின் இல்லங்களில் 10,541 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4925 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் 384 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83,848-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.